1976 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட விக்கிரமாராச்சி மூக்கு கண்ணாடி மற்றும் கேட்டல் பராமரிப்பு நிறுவனமானது, பார்வை மற்றும் கேட்டல் குறைபாடு உள்ளவர்களுக்கு, சிறந்த தீர்வுகளை வழங்கும் இலங்கையின் முன்னோடி நிறுவனமாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டுள்ளது. பார்வைக் குறைபாடு மற்றும் செவித்திறன் குறைபாடுகளுடன் சமூகத்தில் வாழ்கின்ற, எமது வாடிக்கையாளர்களுக்கு, உலகத்தரம் வாய்ந்த உபகரணங்களைக் கொண்டு, அவர்களின் குறைபாடுகளுக்கான தீர்வுகளை நாம் வழங்குகிறோம். எங்கள் வாடிக்கையாளர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு, தரமானதும் பொருத்தமான விலைகளிலும் சிறந்த வியாபாரக் குறியைக் கொண்ட உபகரணங்களை நாங்கள் வழங்குகின்றோம்.
உங்கள் செவிப்புலன் குறைபாடுகளைத் தீர்ப்பதற்கு நாங்கள் முன்னுரிமை தருகின்றோம். கேட்கும் பாக்கியத்தை அனுபவியுங்கள்! உங்கள் குறிப்பிட்ட செவிப்புல குறைபாடுகளைப் பூர்த்தி செய்வதற்காக நாங்கள் உங்களுக்கு ஏற்ற செவிப்புலன் குறைபாடுகளுக்கான தீர்வுகளை கொண்டு வருகிறோம்.
அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் நிபுணர் ஆலோசனைச் சேவைகளுடன் உங்கள் செவிப்புலன் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு நாடு முழுவதும் செவிப்புலன் சம்பந்தப்பட்ட நிபுணர்கள் உங்களுடன் இணைந்து செயல்படுவார்கள். உங்களுக்கான சிறந்த சிகிச்சையைக் கண்டறிய எங்கள் செவிப்புலன் நிபுணர்களுடன் இன்றே தொடர்பு கொள்ளுங்கள்.
உங்கள் பார்வையை மீளப்பெற்று ஒரு முறை இந்த உலகத்தை பாருங்கள். உங்களுக்கு சிறந்த பார்வைத் திறனை வழங்குவதற்காக நாங்கள் விரிவான வகையிலும் தனிப்பட்ட ரீதியிலுமாக சிறந்த விதத்தில் எமது சேவைகளை வழங்குகின்றோம்.
மிகவும் மேம்பட்டதும் தரமான தொழில்நுட்ப திறன்களைக் கொண்டதுமான கருவிகள் ஊடாக உங்களது கேட்டல் மற்றும் பார்வைத் திறன்களை மீளப் பெற்று, நீங்கள் விரும்பிய வகையில் உங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சிகரமாக அமைத்துக்கொள்ளுங்கள்.
48 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்துடன் செவிப்புலன் மற்றும் பார்வை பராமரிப்பு துறையில் நிபுணத்துவம் பெற்றுள்ளோம்.
ஆசியாவின் முன்னணி தொழில்நுட்ப சேவை வழங்குநராக நாங்கள் சர்வதேச அளவில் சான்றுப்படுத்தப்பட்டுள்ளோம்.
எங்கள் சேவைகள் மற்றும் தயாரிப்புகள் ஆசிய சமூகத்தின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் அமைந்துள்ளன.
பார்வை மற்றும் கேட்டல் பராமரிப்பு உபகரணங்கள் அனைத்தும் ஆய்வு கூடத்தில் பரிசோதிக்கப்பட்டு தயாரிக்கப்படுகின்றன.