1976 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட விக்கிரமாராச்சி கண் மற்றும் செவிப் பராமரிப்பு நிறுவனமானது தற்போது நாட்டின் முன்னணி நிறுவனமாக உயர்ந்துள்ளது. உயர் மட்ட கண் மற்றும் செவி பராமரிப்பு சாதனங்களை வழங்குவதிலும் முன்னணி விநியோக நிறுவனமாக உருவெடுத்துள்ளது.
நன்கு பயிற்சி பெற்ற மற்றும் அனுபவம் வாய்ந்த நிபுணர்களைக் கொண்டுள்ள நாங்கள், தொழில்முறை மற்றும் நம்பகத்தன்மையின் அடிப்படையில் உலகத்தரம் வாய்ந்த சேவையை வழங்குவதற்காக எங்களை அர்ப்பணித்துள்ளோம். ஆர்வத்துடனும் நேர்மையுடனும் செயல்படுவதன் மூலம், மக்கள் தங்கள் பார்வையையும் செவிப்புல திறனையும் மீட்டெடுக்க உதவுவதே எங்கள் அர்ப்பணிப்பின் நோக்கமாகும்.
சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்ற கண் பராமரிப்பு மற்றும் செவிப்புலன் பராமரிப்பு சேவைகளுடன் எங்கள் வாடிக்கையாளர்களின் வாழ்க்கையை ஒளி பெறச் செய்வதற்கு, தொழில்துறையில் புதிய நுட்பங்களை நாங்கள் அறிமுகப்படுத்தியுள்ளோம். எதிர்காலத்தில் புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் தொழில்துறையில் புதிய சாதனைகளைப் படைபதற்கும் காத்திருக்கின்றோம்.
மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக மிக உயர்ந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி செவிப்புலன் மற்றும் கட்புல குறைபாடுகளுக்கு தீர்வு காணுதல்.
உலகத்தரம் வாய்ந்த கட்புல செவிப்புல சாதனங்களை சிறந்த விலையில் வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதில் நம்பகமானதும், முன்னணியானதுமான நிறுவனமாக எங்கள் நிறுவனத்தை கட்டியெழுப்புதல். சிறந்த தீர்வுகள் வழியாக எங்கள் வாடிக்கையாளர்களின் வாழ்க்கை முறையை மேம்படுத்துவதற்காக நாங்கள் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றோம்.
1976 ஆம் ஆண்டு எங்கள் நிறுவனம் ஆரம்பிக்கபட்டது. நாங்கள் கடந்த 48 ஆண்டுகளுக்கும் மேலாக செவிப்புலன் மற்றும் கட்புல குறைபாடுகள் உள்ள மக்களுக்காக சேவையாற்றி வருகின்றோம். எங்கள் சேவைகளின் தரத்திற்கு கிடைத்த வெற்றியாக, விக்கிரமாராச்சி ஒப்டிசியன்ஸ் அன்ட் ஹியரிங் என்ற பெயர் மிகக் குறுகிய காலத்திலேயே வெற்றியின் உச்சத்தை எட்டியது. எந் நேரமும் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு நம்பகமான சேவையை வழங்குவதற்காக நாங்கள் எப்போதும் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம். நவீன உபகரணங்களின் பயன்பாடு எங்கள் வெற்றிக்கான நுழைவாயிலாக இருந்தன. நாங்கள் தொடக்கத்திலிருந்தே, இலங்கையின் செவிப்புல மற்றும் கட்புல பராமரிப்புத் துறையின் தொழில்முறைத் தரங்களை மறுவரையறை செய்து, தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை தொடர்ந்து அறிமுகப்படுத்தியதன் ஊடாக பல சவால்களை சமாளிப்பதில் வெற்றி கண்டு வந்தோம்.
கட்புல மற்றும் செவிப்புல பிரச்சினைகளுக்கான தீர்வு வழங்குநராக செயற்பட்டமைக்காக நாங்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டமையை பெருமையாகக் கொள்கிறோம். எங்கள் விருதுகளும் சாதனைகளும் நாங்கள் வழங்கிய மிகச் சிறந்த சேவைகளையே பிரதிபலிக்கின்றன. எங்கள் பயணம் முழுவதும் எங்களுக்குக் கிடைத்த சில விருதுகளையும் சாதனைகளையும் பகிர்ந்து கொள்வதில் பெருமிதம் கொள்கிறோம்.